ஏக இறைவனின் திருப்பெயரால்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பெண் பேச்சாளர்கள் மற்றும் தாஃவா குழு சகோதரிகளுக்கான ஒருநாள் தர்பியா வகுப்பு ஜூலை 13 (13.07.2025) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10:40 மணிமுதல் மாலை 5:40 மணிவரை காரமடை V & V ஹாலில் வைத்து மாவட்டத் தலைவர் சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
அல்ஹம்துல்லில்லாஹ்…






இத்தர்பியாவின் துவக்கமாக தர்பியா ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோ. யாசர் அரஃபாத் (மாவட்டத் தலைவர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அடுத்து சுய பரிசோதனை என்ற தலைப்பில் சகோ. M.A. அப்துர் ரஹ்மான் MISc (TNTJ பேச்சாளர்) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
தேநீர் இடைவேளைக்கு பிறகு
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற தலைப்பில் சகோ. C.V. இம்ரான் DISc (TNTJ மாநிலச் செயலாளர்) அவர்கள் வீடியோ கிளிப்பிங் மூலம் பிற இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை தெளிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மார்க்கப் பணியில் மங்கையரின் பங்கு என்ற தலைப்பில் சகோ. M.A. அப்துர் ரஹ்மான் MISc (TNTJ பேச்சாளர்) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
உணவு மற்றும் தொழுகைக்கான இடைவேளை..
மதிய அமர்வின் துவக்கமாக திறனாய்வுத் தேர்வு நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பெண் பேச்சாளர்கள் மற்றும் பெண்கள் தாஃவா குழு பொறுப்பாளர்கள் தொடர்பான நிர்வாக தகவல்களை சகோ. முஹம்மது தாவூத் (மாவட்டச் செயலாளர்) அவர்கள் அறிவிப்பு செய்தார்.
அடுத்து ஐயமும்! தெளிவும்! என்ற தலைப்பில் சகோ. C.V இம்ரான் DISc (TNTJ மாநிலச் செயலாளர்) அவர்கள் மார்க்கம் சார்ந்த சந்தேகங்களுக்கு மார்க்க அடிப்படையில் பதிலளித்தார்.
இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இத்தர்பியா வகுப்பில் கலந்து கொண்ட மாவட்டப் பெண் பேச்சாளர்கள் மற்றும் தாஃவா குழு சகோதரிகள் அனைவரும் ஆர்வமாக பங்கெடுத்து அடுத்த கட்ட தாஃவா பணிகளை வீரியப்படுத்தும் உத்வேகத்துடன் கலைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்…
-TNTJ கோவை வடக்கு மாவட்டம்