சமூக விரோதிகளால் மானபங்கம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அன்றைய தினமே மாவட்ட நிர்வாகம் சார்பாக கண்டன அறிக்கை வெளியிட்டதோடு. காவல்துறை மற்றும் வருவாய்த்துறை நடத்திய அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் கலந்து கொண்டு அந்த குடும்பத்திற்கு ஆதராவாக இருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக நேற்று. TNTJ புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில், மாவட்ட செயலாளர் முகமது மீரான் மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும். அங்கு முகாமிட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திரு. அபிஷேக் குப்தா அவர்களை நேரில் சந்தித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இன்னும் இந்த வழக்கில், அந்த குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும், பர்வீன் பானுவின் இரு மகள்களுக்கும் அரசு வழங்குவதாக சொல்லி உள்ள வேலைவாய்ப்பையும் உறுதிப்படுத்த, தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உறுதுணையாக இருப்போம் என்பதையும் சம்பந்தப்பட்ட பர்வீன் பானுவின் குடும்பத்தாருக்கு தெரிவித்தோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
புதுக்கோட்டை மாவட்டம்
செல் : 83445 62682, 83445 62683, 83445 62688