மாவட்டச் செயல்வீரர்கள் & வீராங்கனைகள் கூட்டம்

அரங்கம் கொள்ளா மக்கள் கூட்டத்துடன், மனநிறைவுடன் நடந்து முடிந்த, மாவட்டச் செயல்வீரர்கள் & வீராங்கனைகள் கூட்டம்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள், 4 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, மாவட்டச் செயல்வீரர்கள் & வீராங்கனைகள் கூட்டம், 20.07.2025, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, அறந்தாங்கி அப்துல் ஹமீது தெரு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.
இதற்கு, மாவட்டத் தலைவர், H.சித்திக் ரகுமான்., B.E., அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இதில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் S.ரபீக் ராஜா, துணைச் செயலாளர்கள் ஷேக் அப்துல்லாஹ், புதுகை மீரான், அப்துர் ரஹ்மான் ரஹுஃப், அறந்தாங்கி ஷேக் அப்துல்லாஹ், மருத்துவ அணிச் செயலாளர் சபியுபுல்லா மற்றும் மாணவரணிச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் MISc ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில்,
TNTJ பேச்சாளர்,
 KMA.முஹம்மது மக்தூம் தவ்ஹீதி அவர்கள்,
கொள்கையில் நிலைத்திருப்போம்
என்ற தலைப்பில், எழுச்சியோடு துவக்க உரையாற்றினார்கள்.
அடுத்ததாக, பேச்சாளர்,
 I.சித்தி ஃபர்தானா ஆலிமா அவர்கள்,
மார்க்க வழியில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அடுத்ததாக, மாவட்டத் துணைச் செயலாளர்,
 A.அப்துர் ரஹ்மான் ரஹூஃப் அவர்கள்,
புள்ளிப்பட்டியல் தொடர்பாக கிளைகளுக்கு விளக்கினார்கள்‌.
அடுத்ததாக, மாவட்டத் தலைவர்,
 H.சித்திக் ரகுமான்., B.E., அவர்கள்,
மார்க்க பணியில் மங்கையரின் பங்கு என்ற தலைப்பில், பெண்கள் தாவா குழு செய்ய வேண்டிய தாவா பணிகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.
அடுத்ததாக, மாநிலச் செயலாளர்,
 I.அன்சாரி அவர்கள்,
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற செயல்திட்டத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக, மாவட்டத் துணைச் செயலாளர்,புதுகை மீரான் மைதீன் அவர்கள்
நன்றியுரையாற்றினார்கள்.
இதில் மாவட்டம் முழுவதுமுள்ள கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், மாவட்டத்தின் ஆண், பெண் பேச்சாளர்கள் மற்றும் மாவட்டத்தின் செயல்வீரர்கள் & வீராங்கனைகள் என ஐநூறுக்கும் மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் அரங்கம் கொள்ளா அளவிற்கு கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்…
என்றும் மார்க்க மற்றும் சமுதாயப் பணியில்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுக்கோட்டை மாவட்டம்.