கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக இஸ்லாமிய இளைஞர்கள் சங்கமம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்த
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக
இன்றைய தினம் (20.07.2025)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக
இஸ்லாமிய இளைஞர்கள் சங்கமம்
நிகழ்ச்சி, கடலூர் OT கிளை மர்கஸில் வைத்து நடைபெற்றது…
இளைஞர்களின் மார்க்கப்பற்றை மெருகூட்டும் வண்ணமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்…
இதில் இளைஞர்களுக்கு தேவையான அறிவுரைகளும், மேலும் இளைஞர்களிடத்தில் இருந்து பல்வேறு விதமான கலந்துரையாடல்களும் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்டத் தலைவர் முஹம்மது யாஸீன் அவர்கள் அவர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து சுருக்கமாக துவக்க உரை நிகழ்த்தினார்கள்..
அதனையடுத்து, மாவட்ட மாணவரணி செயலாளர் சகோதரர் இல்யாஸ் MISc “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பிறகு (TNTJ பேச்சாளர்) சகோ. அப்துஸ் சமது M.I.Sc அவர்கள் “இஸ்லாம் கூறும் இளமைப்பருவம்” என்ற தலைப்பிலும், TNTJ பேச்சாளர் சகோதரர், M.A. அப்துர்ரஹ்மான் MISc அவர்களும் “இஸ்லாமிய இளைஞர்களும் இன்றைய நிலையும்”
என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு மத்தியிலே உரை நிகழ்த்தினார்கள்..
இறுதியாக நன்றியுரை மாவட்ட பொருளாளர் அப்துல் காதர் நன்றியுரை நிகழ்த்த மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது…
அல்ஹம்துலில்லாஹ்…
என்றும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில்…
TNTJ கடலூர் வடக்கு மாவட்டம்.