சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கீழ அண்ணா வீதி கிளை சார்பாக முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத செயல் திட்டத்தை முன்னிட்டு மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் (19-07-2025) அன்று மாலை 7 மணி அளவில் கீழ அண்ணா வீதியில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தலைமையில், கீழ அண்ணா வீதி கிளை நிர்வாகிகள்
முன்னிலையில், நடைபெற்ற இப்பொது கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியாக, மாவட்ட தலைவர் சல்மான் பாரிஸ் அவர்கள் TNTJயின் சமூகப் பணிகள் என்ற தலைப்பில் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோதரர் ஃபெரோஸ் கான் அவர்கள் ஆடம்பர உலகமும்! அழியாத மறுமையும்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!