சத்திய முழக்கம் மாநாடு

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் சார்பாக *சத்திய முழக்க மாநாடு* (27-07-2025) ஞாயிற்றுகிழமை மாலை 3 மணி அளவில் புதுச்சேரி பாப்ஸ்கோ திடலில்
மாவட்ட தலைவர்
ஹபீப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

*குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பணமா? குணமா?* என்ற தலைப்பில்
மாநில பொதுச் செயலாளர் *முஜிபுர் ரஹ்மான்* நடுவராக பங்கு பெற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது
*R அப்துல் கரீம்* Misc TNTJ மாநில தலைவர் அவர்கள் பாழாக்கப்படும் ஜனநாயகம் என்ற தலைப்பிலும்,
*சபீர் அலி* Misc மாநில செயலாளர் அவர்கள் எடுத்துரைப்போம் ஏகத்துவத்தை! என்ற தலைப்பிலும்,
காஞ்சி இப்ராஹிம்
TNTJ மாநில பொருளாளர் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடத்தப்படும் உம்மு சுலைம் பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின்
9 ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இறுதியாக புதுச்சேரி மாவட்ட செயலாளர் *சாகுல் ஹமீது* அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்..
என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியில்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* புதுச்சேரி மாவடடம்