


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத் தலைவர் அப்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர்கள் அஷ்ரப் அலி மற்றும் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கில் மாநிலச் செயலாளர் அல் அமீன் அவர்கள் இன்றைய இளைஞர்களின் நிலை?குறித்து இளைஞர்களுடன் நேரடி கலந்துரையாடல் மற்றும் சிறப்புரை நிகழ்த்தினார்.மேலும் மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் அவர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இக்கருத்தரங்கில் இருநூறுக்கும் அதிகமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாவட்டப் பொருளாளர் ஜாஃபர் சாதிக் அவர்கள் நன்றி கூறி நிறைவு செய்தார்.