அடுத்தகட்ட தாஃவா களத்தை நோக்கி உத்வேகமளித்த திருச்சி மாவட்ட நிர்வாகவியல் தர்பியா & செயற்குழு!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டத்தின் சார்பாக நிர்வாகவியல் தர்பியா & செயற்குழு திருச்சி காஜா நகர் VSMI இப்ராஹீம் ஹாலில் (03/08/25) ஞாயிறு காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடைபெற்றது.

இதில்,
சகோ.அப்துல் ரஹீம் (TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர்) ‘நமது இலக்கு என்ன?’ மற்றும் ‘நிர்வாகமும் அதை அனுகும் முறைகளும்’ ஆகிய தலைப்புகளில் நிர்வாகவியல் குறித்து உரையாற்றினார்கள்.
சகோ.முஹ்ஸின் (TNTJ மாநில செயலாளர்) அவர்கள் ‘நிர்வாகிகள் கவனத்திற்கு’ மற்றும் ‘நிலைப்பாடுகள்’ ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.
‘இஹ்லாஸோடு பயணிப்போம்’ என்கிற தலைப்பில் சகோ.M.A. அப்துர் ரஹ்மான் MISC அவர்கள் உரையாற்றினார்.
‘அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தியாகம் செய்வோம்’ என்கிற தலைப்பில் சகோ. சமயபுரம் உமர் (TNTJ திருச்சி மாவட்ட தலைவர்) உரையாற்றினார்.
மேலும்,
TNTJ திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு முக்கியமான நிர்வாக அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஒரு நாள் நிர்வாகவியல் தர்பியா & செயற்குழுவில் கிளையின் நிர்வாகிகள், அணிப் பொறுப்பாளர்கள், மாவட்ட தாயீக்கள் என அனைவரும் ஆர்வமாக பங்கேற்று அடுத்த கட்ட பிரச்சார பணிகளை வீரியமாக களப்பணியாற்றும் ஆர்வத்துடன் கலைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!