அல்லாஹ்வின் திருப்பெயரால்…
ஜனநாயக பாதுகாப்பு மாநாடு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக, மாபெரும் ஜனநாயக பாதுகாப்பு மாநாடு (03-08-2025) அன்று மாலை 4:00 மணியளவில் காரைக்குடி பாண்டியன் ஹோட்டல் எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது.















மாவட்டத் தலைவர் ஆசிப் அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக மாநில செயலாளர் யூசுப் அவர்கள் நடுவராக இருந்து, இஸ்லாமிய குடும்ப அமைப்புக்கு பெரிதும் பங்காற்றுவது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் அன்சாரி மதவாதத்தால் அழியும் இந்திய ஜனநாயகம்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு தலைவர் சகோதரர் M, S சுலைமான் ஃபிர்தௌஸி அவர்கள் இஸ்லாம் கூறும் இனிய குடும்பம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் சகோதரர் ஆர். அப்துல் கரீம் misc அவர்கள் பாதை மாறும் இளைய சமுதாயம்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
ஜனநாயக பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானங்களை மாவட்ட பொருளாளர் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் வாசித்தார்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும்,
மதவாத சக்திகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற
வேண்டும் என்ற அக்கறையுடனும், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்
இறுதியாக மாவட்ட செயலாளர் சகோதரர் ஹனிபா அவர்கள் நன்றியுரை கூறி
நிகழ்ச்சியை நிறைவு செய்தார்
அல்ஹம்துலில்லாஹ்!