தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் வண்டி மேடு கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு மாநாடு மற்றும் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் 15/08/2025 இன்று மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்ட தலைவர் சல்மான் ஃபார்ஸி அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வண்டி மேடு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது
தொடர்ந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் சகோதரர் சல்மான் ஃபார்ஸி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோதரர் S.A முஹம்மது ஒலி MISC அவர்கள் விடுதலை போரில் முஸ்லிம்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் சகோதரர் M.A அப்துர் ரஹ்மான் MISC அவர்கள் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக கிளை செயலாளர் இப்ராஹீம் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அல்ஹம்துலில்லாஹ்…