ஆண்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென் சென்னை மாவட்டம் சார்பாக 17.08.2025 அன்று செயல்வீரர்கள் கூட்டம் முஸ்லிம் முன்மாதிரி இளைஞர்கள் செயல்திட்டதை முன்னிட்டு மாவட்ட தலைவர் சகோ. M.சாதிக் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் துவக்க உரையாக மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோ. முஹம்மது ஜுபைர் அவர்கள் ஒன்றிணைத்து செயல்படுவோம் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள்.
அடுத்ததாக, மாவட்ட தலைவர் சகோ. சாதிக் அலி அவர்கள் கடந்து வந்த பாதை என்கிற தலைப்பில் கடந்த 2 மாதங்கள் மாவட்டம் மற்றும் கிளைகள் செய்த நிகழ்ச்சி மற்றும் பணிகளை அறிவித்தார்.
அடுத்ததாக, மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது ஆசாத் அவர்கள் அடுத்த கட்ட செயல்திட்டத்தை அறிவித்தார்.
அடுத்ததாக, மாநில செயலாளர் சகோ. பெரோஸ்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
இறுதியாக,
மாவட்ட துணைச் செயலாளர் சகோ. சிராஜுல் அமீன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்…