தெருமுனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் க்ரைம் பிரான்ச் கிளை சார்பாக 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாபெரும் தெருமுனை கூட்டம் க்ரைம் பிரான்ச் பகுதியில் (17-08-2025) அன்று மாலை 7 மணி அளவில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை தலைவர் அப்துல் சமது misc அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் துவக்கமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் அம்ஜத் கான் அவர்கள் வட்டி ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
தொடர்ந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் அப்துல் சமது misc அவர்கள் இளைஞர் எழுச்சி மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோதரர் செங்கோட்டை பைசல் அவர்கள் சுதந்திர இந்தியாவும், இஸ்லாமியர்கள் சிந்திய ரத்தமும்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக கிளை துணைத் தலைவர் முகமது ரஃபீக் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அல்ஹம்துலில்லாஹ்