அவசர செயற்குழு

TNTJ கடலூர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெறவிருக்கும் இளைஞர்கள் சீர்திருத்த மாநாட்டை முன்னிட்டு 22-08-2025 வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் லால்பேட்டை தவ்ஹீத் பள்ளிவாசலில் வைத்த  மாவட்ட அவசர செயற்குழுமிகஅழகாய் நடைபெற்று முடிந்தது.
இச்செயற்குழுவில் அனைத்து கிளை நிர்வாகிகளும் அணிச் செயலாளர்களும் மாவட்ட அனைத்து பேச்சாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இக்கூட்டத்தை TNTJ கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் *முஹம்மது ஃபஹத் MISC* அவர்கள் தலைமை தாங்கி துவக்க உரையாற்றினார்கள்.
அடுத்தபடியாக TNTJ பேச்சாளர் *முஹம்மது ரஜ்வி* அவர்கள் அல்லாஹ்விற்கே அர்ப்பணிப்போம்..!! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதன் பிறகு கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் *ஜபருல்லாஹ்* கிளைகளுக்கான மிக முக்கிய அறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து TNTJ மாநிலச் செயலாளர் *சேட் முஹம்மது* அவர்கள் மாநாட்டு பிரச்சாரத்தின் வியூகங்களையும் வழிமுறைகளையும் விளக்கமாய் அளித்து கிளைகளுடைய ஒத்துழைப்பின் சதவீதத்தை கேட்டு அறிந்தார்கள்.
இறுதியாக TNTJ மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் *மயிலை அப்துர்ரஹீம்* அவர்கள் வீறுகொண்டு புறப்படுவோம்..!! என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார்கள்.
அடுத்தபடியாக TNTJ கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் *முஹம்மது பஹத் MISC* அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த சில ஒப்பீடுகளை சுட்டிக்காட்டி கிளைகளின் வாக்குறுதிகளை பெற்றார்கள்.
அதன் பிறகு மாவட்ட பொருளாளர் *அப்துல் அஹத்* அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.