செயல் வீராங்கனைகள் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எதிர்வரும் அக்டோபர் 5ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாபெரும் இளைஞர் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக மாபெரும் செயல் வீராங்கனைகள் கூட்டம் (22-08-2025) அன்று மாலை 7 மணியளவில் வில்லாபுரம் ரய்யான் மஹாலில் நடைபெற்றது.




மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் துவக்கமாக,
இலக்கின்றி வாழும் இளைய சமூகம்! என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் M A, அப்துர் ரஹ்மான் misc அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இளைஞர் எழுச்சி மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
மதுரையில் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள இளைஞர் எழுச்சி மாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்களை திரளாக பங்கு கொள்ளச் செய்து, சமூக தீமையில் மூழ்கிக் கிடக்கும் இஸ்லாமிய சமுதாய இளைஞர்களையும் இளம் பெண்களையும் தங்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் மீட்டு எடுக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் கலைந்து சென்றனர்
அல்ஹம்துலில்லாஹ்!