இரத்ததான முகாம்

நாகூரில் TNTJ நாகூர் கிளை 1 சார்பில் இரத்ததான முகாம்

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கிளை 1 மற்றும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி

இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் இன்று 31.08.2025

ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணியளவில் நடைபெற்றது.

 

 

 

 

 

மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தாரிக் தலைமையில் நடைபெற்ற முகாமில்

மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இம் முகாமில் ஆண்கள், பெண்கள் என 40 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.

இம்முகாமில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மருத்துவக்

கல்லூரியின் மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் இஸ்லாம் குறித்த

புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.