மாபெரும் இரத்தத்தான முகாம் – 05.09.2025
AITJ(F), அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லீம் காலனி கிளை சார்பாக, 79வது
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லீம் காலனி அருகிலுள்ள
“Indian Children English School” இல் வைத்து “Dr.B.R.அம்பேத்கர் மெடிக்கல் காலேஜ்”
உடன் இணைந்து “மாபெரும் இரத்தத்தான மற்றும் இரத்த பரிசோதனை முகாம்”
நடைபெற்றது.





இம்முகாமில் “உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்” என்ற அடிப்படையில் 36க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டு இருபத்தி ஒன்பது (29) யூனிட்கள் இரத்தத்தானம்
செய்யப்பட்டது.
இம்முகாமிற்கு வந்திருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு “இஸ்லாம்
குறித்த சிறிய அறிமுகம்” செய்யப்பட்டது.
இம்முகாமில் கலந்து கொண்டவர்கள், இரத்தத்தானம் செய்தவர்கள் மற்றும் இதற்காக
உழைத்தவர்கள் என அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!
அல்ஹம்துலில்லாஹ்!
இவண்,
என்றும் மனித நேயப் பணியில்,
AITJ(F) – அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
முஸ்லீம் காலனி கிளை, கர்நாடகா மண்டலம்