இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாடு அக்டோபர் 5, மதுரையில் சங்கமிப்போம்
சரித்திரம் படைப்போம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத செயல் திட்டம் மற்றும் 5 அக்டோபர்
2025 அன்று மதுரையில் நடைபெறவிருக்கும் *இளைஞர்கள் எழுச்சி மண்டல
மாநாட்டை முன்னிட்டு, இராமநாதபுரம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் செயல்வீரர்கள்
மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம் 05-09-2025 அன்று நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் ஐ. எஸ். இப்ராஹிம் சாபிர் தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில்,
மாவட்டச் செயலாளர் M.சத்தார் அலி,
மாவட்ட துணைத் தலைவர் N.யாசர் அரஃபாத் MISC,
மாவட்ட துணைச் செயலாளர்கள் M.தினாஜ்கான், I.நஸ்ருதீன், S.மீரான்,
தொண்டரணிச் செயலாளர் A.அல்சபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
500க்கும் அதிகமான செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் உற்சாகமாக
பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் M.சத்தார் அலி “அர்ப்பணிப்பு” என்ற தலைப்பில்
உற்சாகமூட்டும் உரையாற்றினார்.
மாநிலச் செயலாளர் ஐ. அன்சாரி* அவர்கள், முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்
செயல்திட்டம் மற்றும் இளைஞர்கள் எழுச்சி மண்டல மாநாட்டு பணிகளை
வீரியமுள்ள வழிகாட்டலுடன் விளக்கினார்.
கூட்டத்தின் நிறைவில்,
*இன்ஷா அல்லாஹ்! அக்டோபர் 5, மதுரையில் சங்கமிப்போம் – சரித்திரம்
படைப்போம்!
என உறுதியுடன் அனைத்து செயல்வீரர்களும் & செயல்வீராங்கனைகளும்
உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட துணைத் தலைவர் N.யாசர் அரஃபாத் MISC நன்றியுரை ஆற்றி, நிகழ்ச்சி
நிறைவடைந்தது.