அல்லாஹ்வின் திருப்பெயரால்…
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத செயல் திட்டத்தை முன்னிட்டு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் (07-09-2025) அன்று ஞாயிற்றுக்கிழமை
மாலை 7 மணி அளவில் வாசுதேவநல்லூரில் நடைபெற்றது
மாவட்டத் தலைவர் அப்துல் ஸலாம் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர்
ஜலாலுதீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இப்பொதுக்
கூட்டத்தில் துவக்கமாக மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள்.





அச்சுறுத்தப்படும் ஜனநாயகம் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்
மாநில செயலாளர் முஹம்மது ஒலி misc அவர்கள் உரை நிகழ்த்தினார்
அக்டோபர்-5 இளைஞர் எழுச்சி மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் M S, சுலைமான்
ஃபிர்தௌஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற
ஆர்வத்தோடு தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான
ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு இப்பொது கூட்டத்தின்
வாயிலாக பயனடைந்தனர்
அல்ஹம்துலில்லாஹ்!