இளைஞர்களுக்கான சங்கமம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக முன்மாதிரி
முஸ்லிம் இளைஞர்கள் என்ற செயல்திட்டத்தின் செயல்பாடாக
இளைஞர்களுக்கான சங்கமம் நிகழ்ச்சி
நேற்று (07.09.2025) அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பித்தது
முதலாவதாக மா.து.செ அப்துல் ஹமீது தலைமை ஏற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
வலைதளமும் இளைஞர்களும் என்ற தலைப்பில் மாவட்ட தாயீ ரஷீது விளக்கினார்
கற்றதும் பெற்றதும் என்று கல்வியில் நாம் சாதித்த சாதிக்க வேண்டியது குறித்து
மா.து.செ.ஃபக்ருதீன் விளக்கினார்
அறிந்ததும் அறியாததும் என்ற தலைப்பில் (இஸ்லாமிய வரலாறும் இந்திய குடியரசை
கட்டியமைக்க உதவியதும்) மா.து.த இப்ராஹிம் விளக்கினார்
பொறுப்பும் பொதுநல மும் என்ற தலைப்பில் (இளைஞர்கள் மார்க்க புரிதலோடு
சமுதாய பணிகளைச் செய்ய வேண்டும்) மாநில செயலாளர் ஃபெரோஸ் உரை
நிகழ்த்தினார்
இறுதியாக மா.தொ.அணி பிலால் நன்றியுரை நிகழ்த்த நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்