அல்லாஹ்வின் திருப்பெயரால்….
மாபெரும் மார்க்க விளக்க கூட்டம்! மற்றும் சிறப்பு பட்டிமன்றம்!
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத செயல் திட்டத்தை முன்னிட்டு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக மாபெரும்
மார்க்க விளக்க கூட்டம் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் (14/9/2025) அன்று மாலை 7
மணியளவில் வில்லாபுரம் ஜியோ ஆபீஸ் அருகில் நடைபெற்றது.




மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தின் மதுரை மாவட்ட பேச்சாளர் M, ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இளைஞர்
எழுச்சி மாநாடு ஏன் எதற்கு? என்று தலைப்பில் உரை நிகழ்த்தினார்
தொடர்ந்து இன்றைய இளைய தலைமுறையை பெரிதும் வழிகெடுப்பது
பெற்றோர்களா? நவீன கலாச்சாரமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்
நடைபெற்றது.
பட்டிமன்றத்தின் நடுவராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு
உறுப்பினர் சகோதரர் எம் ஐ சுலைமான் அவர்கள் வழி நடத்தினார்
இறுதியாக இஸ்லாம் கட்டமைத்த இளைய தலைமுறை என்ற தலைப்பில் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் M I, சுலைமான்
அவர்கள் உரை நிகழ்த்தினார்
மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் வில்லாபுரம் பகுதியைச்
சேர்ந்த ஏராளமான சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு
பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!