இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

ஐயங்களைத் தெளிவுபடுத்தித் தந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தின் ஒரு அங்கமாக திண்டல் கிளை சார்பாக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்  நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணியளவில் திண்டல் ஸ்ரீநிவி அரங்கத்தில் நடைபெற்றது.
ஆண்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வருகை தந்திருந்தது அவர்களுடைய மார்க்க கல்வியின் தேடல் குறித்த அருமையை உணர்த்துவதாக அமைந்தது.
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட..
 ஆலிம்களே தவறு செய்தால் என்ன செய்வது?
 ஸஅத் பின் முஆது (ரலி) அவர்களின் மரணத்திற்கு அர்ஷ் குலுங்கியதா ?
 உறவைப் பேணுவதின் அளவுகோல் என்ன ??
 ஒரே பயணத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட உம்ராக்களை செய்யலாமா..?
போன்ற ஏராளமான மார்க்கம் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு மௌலவி  எம்.எஸ் சுலைமான்  அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..!