திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக “முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்” செயல் திட்டத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான வினாடி வினா நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சகோ. மாலிக் பாஷா அவர்கள் தலைமையில் புங்கம்பேடு பள்ளிவாசல் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட துணைத் தலைவர் சகோ. நிஜாமுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
கிளை அளவில் நடத்தப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 10 அணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றன.
பல சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் இறுதியாக மூன்று அணிகள் வெற்றி பெற்றன.
முதல் இடம் : தாங்கல் அணி
இரண்டாம் இடம் : எண்ணூர் அணி
மூன்றாம் இடம் : மணலி புதுநகர் அணி
சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட மாநில செயலாளர் சகோ. ஃபெரோஸ் கான் அவர்கள் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
இறுதியாக மாவட்ட துணை செயலாளர் சகோ. சையது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்…