பெண்கள் தாவா குழு ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக 28/09/25 அன்று காலை
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துறைமுகம் கிளை மர்கஸ்ஸில்
அழைப்புப்பணியை வீரியப்படுத்த பெண் பேச்சாளர்கள் மற்றும் பெண்கள் தாவா
குழு ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அழைப்பு பணியின் நோக்கம், பேச்சாளர்கள் கடைபிடிக்க வேண்டிய
ஒழுக்கங்கள் சம்பந்தமாக பேசப்பட்டது.
இறுதியாக மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்ஷா அல்லாஹ் நடைபெறும் இருக்கும்
“அமைதி மார்க்கம் இஸ்லாம்” நான்கு மாத செயல் திட்டம் சம்பந்தமாக அறிவிப்பு
செய்து அதன் பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பெண் பேச்சாளர்கள் மற்றும் பெண்கள் தாவா குழுவினர் கலந்துக்
கொண்டு பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்…