இரத்ததான சேவைக்கான விருது

அக்டோபர் 1 தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2024 ஆம் ஆண்டில் சிறப்பாக
இரத்ததானம் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி
10.10.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட அளவில் சிறப்பாக இரத்ததானம் வழங்கி செயல்பட்ட தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர்
அழகுமீனா ( இ.ஆ.ப) அவர்கள் சிறப்பு விருது வழங்கினார்.(அல்ஹம்துலில்லாஹ்)