இரத்த தான முகாம்கள் மற்றும் அவசர இரத்த தான சேவைகள்

ஏக இறைவனின் திருப்பெயரால்…
எல்லா புகழும் இறைவனுக்கே
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 25 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில்
இரத்த தான முகாம்கள் மற்றும் அவசர இரத்த தான சேவைகள் செய்வதில் முதல்
இடம் வகித்து வருகிறோம்.அல்ஹம்துல்லாஹ்….

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, இன்று சென்னை ஓமந்தூர் அரசு
மருத்துவமனையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் நமது ஜமாஅத்தின் பல மாவட்ட, கிளை நிர்வாகங்களுக்கு மாண்புமிகு
அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்களும், மாவட்ட ஆட்சியர்
*திருமதி.வே.இரா.சுப்புலெட்சுமி IAS அவர்களும் இரத்த தான பாராட்டு சான்றிதழ் &
கேடயம் வழங்கினார்கள்.