தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் சார்பாக 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி முதல் மாலை 04 மணி வரை அப்பம்பட்டு தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட தர்பியா நடைபெற்றது.

இதில் சலப்பு கொள்கை ஒரு பார்வை என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோதரர் சி.வி இம்ரான் அவர்களும் TNTJவின் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் மாநில செயலாளர் பெரோஸ் கான் அவர்களும் மேலும் தலைமைத்துவ பண்புகள் என்ற தலைப்பில் மாநில துணை பொதுச்செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள், ஜும்மா பேச்சாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
விழுப்புரம் மாவட்டம்