இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கீழ் அண்ணா வீதி கிளை சார்பாக 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 6.30 மணிக்கு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டத் தலைவர் சகோதரர் சல்மான் ஃபார்ஸி அவர்கள் தலைமையில் நமது கிளை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது.



அல்ஹம்துலில்லாஹ்…
இதில் TNTJ மாநில செயலாளர் சகோதரர் ஏ.சபீர் அலி MISC அவர்கள் கலந்துகொண்டு சூனியம் மற்றும் ஜின்கள் பற்றிய கேள்விகளுக்கு மக்களுக்கு புரியும் வகையில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் பதிலளித்தார்கள்.
இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தெளிவான பதிலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏராளமான இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கீழ் அண்ணா வீதி கிளை
விழுப்புரம் மாவட்டம்