துளசேந்திரபுரம் கிளை சார்பாக மழை நிவாரண மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

04.12.2025 வியாழக்கிழமை இன்று தொடர்மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் (5Kg அரிசி, துவரை, ரவை, சேமியா, பிஸ்கட், கோதுமை கொசுவத்தி இதர மளிகை பொருட்கள்) 50 குடும்பங்களுக்கு 26,500 ₹ மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்…
எவர்  தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகிறான்.

என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
-புகாரி: 6951
என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்..!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
துளசேந்திரபுரம் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்.