அதிராம்பட்டினத்தில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜுமுஆ பள்ளிவாசலில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் அவர்கள் தலைமை வகித்தார்,மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு சமூக மக்கள் கலந்துகொண்டு இஸ்லாம் குறித்த பல சேந்தேகங்களை கேட்டனர், மாநிலப் பேச்சாளர் எம்.ஏ.அப்துர்ரஹ்மான்Misc அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் நசுருதீன்,இஸ்மாயில்,இப்ராம்ஷா,சாகுல் மற்றும் ஜலால் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
