தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் சார்பாக வருகின்ற ரமலான் மற்றும் சவூதி நிறுவன தினம் (FOUNDATION DAY) முன்னிட்டு 13/02/2026 (வெள்ளிக்கிழமை) அன்று “கிங் பஹத் ஸ்பெஷலிஸ்ட்” அரசு மருத்துவமனையில் காலை 08.00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.



இதில் சவூதி அரேபியா கிழக்கு மாகாணத்தின் அனைத்து கிளை மற்றும் பல பகுதிகளில் இருந்தும் இரத்தக் கொடையாளர்கள் சுமார் 160 மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பங்குபெற்று பதிவு செய்தனர்.
மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு மொத்தம் “132 கொடையாளர்கள்”* இரத்ததானம் செய்தனர்.
இதற்காக களப்பணி செய்த தம்மாம் மண்டலத்தின் *ஜுபைல், துக்பா, ராக்கா, கோபார், மற்றும் கலீதியா* கிளை நிர்வாகத்திற்கும், உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், இரத்த கொடையாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவ குழுவினருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!
TNTJ தம்மாம் மண்டலம்
சவுதி அரேபியா