தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிளை சார்பாக
(14-02-2026) அன்று மாலை 6:45 மணி அளவில் அச்சன் புதூர் தைக்கா திடலில் மாபெரும் தவ்ஹீது எழுச்சி சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் அவர்கள் தலைமையில், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இப்பொது கூட்டத்தில் துவக்கமாக மாவட்ட தலைவர் அப்துல் சலாம் அவர்கள் உரையாற்றினார்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோதரர் I, அன்சாரி அவர்கள் சுதந்திர இந்தியாவில் நமது நிலை என்று தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் சகோதரர் ஆர். அப்துல் கரீம் MISC அவர்கள் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொதுக்கூட்டத்தில் அச்சன்புதூர் பகுதியைச் சார்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!