பொதுக்குழு

விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் சார்பாக 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணி முதல் மதியம் 01:15 மணி வரை மாவட்ட பொதுக்குழு விழுப்புரத்தில் வண்டிமேடு பகுதியில் உள்ள மாவட்ட தலைமையகம் மர்கஸில் நடைபெற்றது.
பொதுக்குழு நிகழ்வுகள்:
1. ஒரு ஆண்டின் மாவட்ட மற்றும் கிளைகளின் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டது
2. ஒரு ஆண்டின் வரவு செலவுகள் விவரிக்கப்பட்டது
3. தொழுகையின் அவசியமும் தொழாதவர்களின் நிலையும் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முகைதீன் அல்தாபி அவர்கள் துவக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.
4. தாவாவும் அதன் வழிமுறைகளும் என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோதரர் பெரோஸ் கான் அவர்களும், நிர்வாகமும் அதன் ஒழுக்கங்களும் என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோதரர் காஞ்சி சித்திக் அவர்களும் சிறப்புரையாற்றினர்
5. கிளை நிர்வாகிகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டது.
6. இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் அணி செயலாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் பரவலாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
விழுப்புரம் மாவட்டம்