மதரஸா நிகழ்ச்சி

TNTJ இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிளையில் சிறப்பாக நடந்து முடிந்த மதரஸா நிகழ்ச்சி.
15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு மதரஸத்துல் இஸ்லாமியா மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
 
இதில் மாணவ மாணவிகளின் கிராத், பயான், கேள்வி பதில், கலந்துரையாடல், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து.. அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி.! என்ற தலைப்பில் சகோதரர் A.ரியாஸ் ஹமீது அவர்களும்,
மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சகோதரர் K.M.A.முஹம்மது மஹ்தூம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியாக மாணவ மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
*எல்லாப் புகழும் இறைவனுக்கே*
TNTJ எஸ்.பி.பட்டிணம் கிளை