மக்தப் மதரஸா 20ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி முபீன் கிளை சார்பாக மதுரசத்துல் முபின் மக்தப் மதரஸா 20ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி (08-02-2026) அன்று மாலை 4:30 மணி அளவில் தொண்டி அஷ்ரப் அலி திடலில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அல்பார் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முபின் கிளை மக்தப் மதரஸாவில் படிக்கக்கூடிய மாணவ மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இறுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் முஹம்மது மஹ்தூம் அவர்கள் இஸ்லாமிய சமுதாயமே விழித்துக் கொள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மார்க்கத்தை எதிர்கால தலைமுறைக்கு சரியான முறையில் வழிகாட்ட வேண்டும் என்கிற அக்கறையோடு ஏராளமான பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்