ரமலானை வரவேற்போம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டம் இன்று 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் ஒரத்தநாடு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.






இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார்,மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ்,மாவட்ட பொருளாளர் ஜாஃபர் சாதிக்,மாவட்ட துணைச் செயலாளர்கள் வல்லம் பாட்ஷா,அஷ்ரப் அலி மற்றும் மாணவரணிச் செயலாளர் இத்ரீஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஐ.அன்சாரி அவர்கள் ரமலானும் ஈமானும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் மேலும் இதில் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டு ரமலான் சார்ந்த பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
நிறைவாக மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் முஸ்தஃபா நன்றி கூறி நிறைவு செய்தார்.