தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அல்ஹஸனாத் பெண்கள் கல்வியாகத்தின் சார்பாக, பெண்களுக்கான ஒரு வருட ஆலிமா வகுப்பு நடைபெற்று வருகிறது.
இக்கல்வியகத்தில் கடந்த 2023-24 ஆம் ஆண்டில் பாடம் பயின்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி (24-05-2024) அன்று மாலை 5 மணி தொடங்கி
நூர்பள்ளி வாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அல்ஹஸனாத் கல்வியகத்தில் பாடம் பயின்ற மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.
அடுத்ததாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளரும் அல்ஹசனாத் மதரசாவின் ஆசிரியருமான M,A அப்துர் ரஹ்மான் misc அவர்கள், பெற்றோர்களின் பொறுப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ச்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் எம், ஐ சுலைமான் ஃபிர்தௌசி அவர்கள், கற்றதை கற்பிப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக அல்ஹசனாத் கல்வியகத்தில் தேர்ச்சி பெற்ற 12 மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இறுதியாக மதுரை மாவட்ட துணைச் செயலாளர் நன்றி உரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அல்ஹம்துலில்லாஹ்!