மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத செயல் திட்டத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக, (28-06-2025) அன்று சனிக்கிழமை மாலை 7:00 மணியளவில் கணபதி நகர் அருகில்,
மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அஷ்ரப் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோதரர் சபீர் அலி misc அவர்கள் எங்கே செல்கிறது இளைய சமுதாயம்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஸாதி அவர்கள் மௌலீதும்! மார்க்கமும்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் கல்லிடை யாசர் misc அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இளைய சமுதாயத்தை சீர்படுத்தும் நன்னோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பொதுக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இறுதியாக மாவட்ட செயலாளர் நன்றியுரை நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அல்ஹம்துலில்லாஹ்!