செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்

செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்
கடலூர் தெற்கு மாவட்டம் நடத்தும் செப்டம்பர் 7 இளைஞர்கள் சீர்திருத்த மாநாட்டை முன்னிட்டு மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் 02-08-2025 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் B.முட்லூர் BKI மஹாலில் வைத்து மிகச் சிறப்பாய் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலாவதாக மாவட்டத் தலைவர்
முஹம்மது ஃபஹத் MISC
அவர்கள் தலைமை தாங்கி துவக்க உரையாற்றினார்கள்
அதைத்தொடர்ந்து மார்க்கப் பணியில் மங்கையர்களின் பங்கு என்கின்ற தலைப்பில்
சகோதரி அஜிமா பானு BISC அவர்கள் உரையாற்றினார்கள்.
பிறகு மாவட்ட பேச்சாளர் அபூநூஃபா
அவர்கள் இஹ்லாஸோடு பணியாற்றுவோம் என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ்
அவர்கள் மாநாட்டு செயல்திட்டங்களையும் அதனை நடைமுறைப்படுத்தும்
வியூகங்களையும் கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களுக்கு
அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு TNTJ மாநிலச் செயலாளர் சேட் முஹம்மது
அவர்கள் அனைத்து கிளையின் நிர்வாகிகளுக்கும் பேச்சாளர்களுக்கும் மாநாடு
சம்பந்தமான மிக முக்கிய கருத்துக்களையும் மாநிலத் தலைமையின்
வழிகாட்டுதல்களையும் பரிமாறிக் கொண்டார்கள்.
இறுதியாக TNTJ மாநில செயலாளர் மவ்லவி
A. சபீர் அலி MISC அவர்கள் இளைஞர்கள் சீர்திருத்த மாநாட்டின் அவசியத்தையும்
முக்கியத்துவத்தையும் அடுத்த கட்ட நம்முடைய நகர்வுகளையும் மிகத்தெளிவாக
உணர்வுபூர்வமாய் எடுத்து விளக்கினார்கள்.
முடிவில் மாவட்டத் தலைவர் கலந்துகொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி கூறினார்கள்.
மாநாட்டை மையப்படுத்தி நடத்தப்பட்ட இக்கூட்டம் கலந்து கொண்டவர்களை
களப்பணியாளர்களாய் களமிறக்கும் வகையில் வீறுகொண்டு புறப்பட வைத்தது.
அல்ஹம்துலில்லாஹ்…
சத்திய மற்றும் சமூகப் பணியில்…
TNTJ கடலூர் தெற்கு மாவட்டம்