தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் கிளை சார்பாக முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் நான்கு மாத தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் புத்தாநத்தம் பஜார் பகுதியில் (15/08/202 அன்று மாலை 5:30 மணியளவில் நடைபெற்றது.





மாவட்ட தலைவர் உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் புத்தாநத்தம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கிய இப்பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் திருச்சி மாவட்ட பேச்சாளர் சகோதரி நஸ்ரின் பானு ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சகோதரர் உமர் ஃபாரூக் அவர்கள் TNTJயின் அரும்பணிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோதரர் சபீர் அலி misc அவர்கள் சீரழியும் இளைஞர்களும்! சிந்திக்க வேண்டிய பெற்றோர்களும்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் சகோதரர் ஆர். அப்துல் கரீம் misc அவர்கள் சமுதாயமே விழித்துக் கொள்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
இறுதியாக கிளை பொருளாளர் காஜா முகைதீன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
புத்தாநத்தம் பகுதியை அடை மழையை ஏற்படுத்த கருமேகங்கள் சூழ்ந்திருந்த போதிலும், மார்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களுமாக திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்