அல்லாஹ்வின் திருப்பெயரால்…
நல்லொழுக்க பயிற்சி வகுப்பு (தர்பியா)
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் 4 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர கிளை சார்பாக (24-08-2025)
அன்று காலை 10 மணி அளவில் சிவகாசி பாண்டியன் ஹோட்டலில் நல்லொழுக்க
பயிற்சி வகுப்பு தர்பியா நடைபெற்றது.







கிளை தலைவர் தலைமையில், சக கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில், TNTJ பேச்சாளர் சகோதரர் அப்துல் நாசர் misc அவர்கள்
நற்பண்புகளும் நமது நிலையும் என்ற தலைப்பில் நிகழ்த்தினார்
அழைப்பு பணி என்ற தலைப்பில் TNTJ பேச்சாளர் சகோதரர் கலந்தர் misc அவர்கள்
உரை நிகழ்த்தினார்கள்
களையெடுக்கப்பட வேண்டிய மனக்கசப்பு! என்ற தலைப்பில்
சகோதரர் K S, அப்துர் ரஹ்மான் ஃபிர்தௌஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளுங்கள் என்ற
திருக்குர்ஆனின் வசனத்திற்கு ஏற்ப, இறையச்சத்தை அதிகப்படுத்தி கொள்ளும்
வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சி முகாமில் சிவகாசி நகர கிளையை
சார்ந்த ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!