சமுதாய விழிப்புணர்வு மாநாடு!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சமுதாய விழிப்புணர்வு மாநாடு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் சார்பாக, மாபெரும் சமுதாய
விழிப்புணர்வு மாநாடு (31-08-2025) அன்று மாலை 4 மணியளவில் ரயிலடி நகராட்சி
மைதானத்தில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
 
மாவட்ட தலைவர் சல்மான் ஃபாரிஸ் அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள்
முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட தலைவர் சல்மான் ஃபாரிஸ்
துவக்க உரை நிகழ்த்தினார்
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம், வண்டி மேடு உள்ளிட்ட கிளைகள்
சார்பாக பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது
இனிய இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்
மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் M I, சுலைமான் அவர்கள் உரையாற்றினார்
இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள்
சத்தியமே வெல்லும் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில
தலைவர் சகோதரர் R. அப்துல் கரீம் misc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
மாவட்ட செயலாளர் மாநாட்டை தீர்மானங்களை வாசித்தார், மாவட்ட பொருளாளர்
நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும்
பெண்களும் திரளாக இம்மாநாட்டில் கலந்து கொண்டு பயனடைந்தனர்
அல்ஹம்துலில்லாஹ்!
விழுப்புரம்…