சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காரைக்கால் மாவட்டம் சார்பாக 12/10/2025 அன்று
மாபெரும் மார்க்கம் மற்றும் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்ட நிகழ்ச்சி
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு TNTJ காரைக்கால் மாவட்ட தலைவர் சகோ. ஜாஹிர் அப்பாஸ்
அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் இந்நிகழ்வில்,
TNTJ மாநில தணிக்கை குழு தலைவர் சகோ. M.S. சுலைமான் அவர்கள், சீரழியும்
இளைய சமுதாயமும், பெற்றோர்களின் பொறுப்பும் என்ற தலைப்பிலும்,
TNTJ மாநில செயலாளர் சகோ. A. சபீர் அலி M.I.Sc அவர்கள், எது சத்தியம்? என்ற
தலைப்பிலும்,
TNTJ மாநில செயலாளர் சகோ. I. அன்சாரி அவர்கள், படுகுழியில் தள்ளப்படும்
ஜனநாயகம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்,
இந்நிகழ்வில் TNTJ காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள்,
காரைக்கால் மாவட்ட மக்கள் மற்றும் பிற மாவட்ட மக்கள் என ஆண்களும்
பெண்களும் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.