ஏக இறைவனின் திருப்பெயரால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு, (08.02.26) அன்று காலை 10 மணியளவில் நடுவீரப்பட்டு கிளை மர்கஸ்ஸில் TNTJ மாநிலச் செயலாளர் சகோ.காரைக்கால் முஹம்மத் யூசுப், மாநிலச் செயலாளர் சகோ.காஜா மொய்தீன் ஆகியோர் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

பொதுக்குழுவை மாநில செயலாளர் சகோ.காஜா மொய்தீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
துவக்கவுரை: சகோ.முஹம்மது அக்ரம் (TNTJ காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்)
தலைப்பு: “அழைப்பு பணியும், சமுதாய கடமையும்!”
ஆண்டு கணக்கறிக்கை தாக்கல் மற்றும் பொருளாதாரம் குறித்தான அறிவிப்புகள்: சகோ.அப்துல் காதர், (மாவட்ட பொருளாளர்).
தாவா பணி செயல்பாடுகள் ஆண்டறிக்கை தாக்கல் மற்றும் மாவட்ட அறிவிப்புகள்: சகோ.அஷ்ரப் அலி (மாவட்ட செயலாளர்).
பரிசளிப்பு தொகுப்புரை: சகோ.அசார் (மாவட்ட தொண்டரணி செயலாளர்).
சிறப்புரை: சகோ.காரைக்கால் முஹம்மத் யூசுப் (மாநில செயலாளர்) தலைப்பு:” அழைப்பு பணியே முதன்மை பணி!”.
நன்றியுரை மற்றும் துஆ : சகோ.காஞ்சி ஆசிப் (காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர்).
இதில் காஞ்சிபுரம் மாவட்ட கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, நற்செயல் செய்து, “நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று சொன்னவரைவிட இனியவை கூறலுக்குரியவர் யார்?
அல்குர்ஆன் – 41 : 33