உதய்பூர் டெய்லர் படுகொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்:

சட்டத்தை கையிலெடுக்கும் அதிகாரம் தனி மனிதருக்கு இல்லை ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த படுகொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது!

சமீபத்தில் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் நோக்கில் பாஜகவின் நுபுர் சர்மா என்பவர் பேசியிருந்தார்.

அதைக்கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தேசமெங்கும் அமைதியான முறையில் நடைபெற்றன.

இந்த நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற பகுதியில் கன்னையா லால் என்பவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கன்னையா லால் என்ற தையல் கடைக் காரர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்தக் கொலையை அறங்கேற்றிய காட்டு மிராண்டிகள் அதை வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர்.

கொலையாளிகள் இருவரும் உடனே கைது செய்யப்பட்டனர்.

ஒரு மதத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்கள் பதிவிட்ட கன்னையா லால் என்பவருடைய செயல் ஏற்புடையதல்ல என்றாலும் அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.

எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு அமைதி வழியில் தான் போராட வேண்டும் என்பது தான் இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்.

இந்தக் கொலையாளிகளோ முட்டாள் தனமாக இக்காரியத்தை அறங்கேற்றியுள்ளனர்.

ஈவு இறக்கமற்ற இது போன்ற செயல்களை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்காது.
இந்திய முஸ்லிம்களும் இதைஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் தங்களின் வலுவான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்திய தேசத்தின் இறையாண்மையையும், ஒருமைப் பாட்டையும் சீர்குலைக்கும் எவ்வித செயல்களையும் இந்திய இஸ்லாமியர்கள் ஏற்க மாட்டார்கள்.

ஒரு மனிதரைக் கொலை செய்பவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார். (அல்குர்ஆன்: 05: 32)
என்று இஸ்லாம் கூறுகிறது .

மதத்தின் பெயரைச் சொல்லி இது போன்ற கொடுஞ் செயல்களை யார்செய்தாலும் ஜாதி மத வேறுபாடின்றி அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசு இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும்.

உதய்பூர் படுகொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிப்பதுடன். இந்தப் படுகொலையை அரங்கேற்றிய இரு கொலையாளிகளுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டுமென நீதித்துறையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது

இப்படிக்கு.

ஆர். அப்துல்கரீம்.

பொதுச் செயலாளர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here