1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 2 அன்று சில மாவட்டங்களில் தேர்வு வைத்துள்ளதாக தெரிகிறது.
அன்றைய தினமே சில வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வும் நடத்தவுள்ளனர்.
முஸ்லிம்கள் தற்போது ரமலான் நோன்பு வைத்து வருகின்றனர்.
பிறை பார்க்கப்படும் அடிப்படையில் மே 2 அன்று பெருநாளாக இருக்க வாய்ப்பு உள்ள நாளாகும்
அதே தினத்தில் தேர்வு வைத்தால் பண்டிகை கொண்டாடும் மாணவர்கள் தேர்வு எழுத இயலாத சூழல் ஏற்படும்.
எனவே பெருநாள் தினமன்று தேர்வு நடத்த வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளது.
அதிகாரிகள் வாய் மொழியாக, ரமலான் பண்டிகை அன்று தேர்வு நடத்த மாட்டோம் என்று சொல்லியுள்ளனர்
(அல்ஹம்துலில்லாஹ்)
சில மாவட்டங்களில் விடுமுறை இல்லை என்று சொன்னால் மாநில நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு,
ஆர். அப்துல் கரீம்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.