ஆளுநர் ரவியா ? ஆர்.எஸ்.எஸ் ரவியா ? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு புத்தக வெளியிட்டு விழாவில தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, இதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இது ஜனநாயகத்தை விரும்பும் எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத பேச்சு.

ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் சொல்லும் கொள்கைகளை ஒரு ஆளுநர் பொது மேடையில் பேசுவது இந்திய மத சார்பின்மையை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும் மனித உரிமை அமைப்பு, மாணவர் அமைப்பு, அரசியல் கட்சி என்று பல முகமூடிகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் பேசியுள்ளார்.

மத வெறி அரசியலை தமிழகத்தில் புகுத்த பாஜக வினரால் கொண்டு வரப்பட்டவர் ஆர்.என்.ரவி என்பதை உலகம் அறியும். இவரின் தமிழக மக்கள் விரோத போக்கை கண்டித்து இவர் அகற்ற பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலேயே குரல்கள் எழுந்து வருகின்றது.

அரசியல் இலாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் இலாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் அவரை ஆளுநர் பொறுப்பில் அமர வைத்த பாஜக விற்கு முழு பொறுத்தமான வார்த்தைகள். அவர்கள் தான் அரசியல் இலாபத்திற்காக மத சார்பற்ற இந்தியாவில் மத வெறியை தூண்டி அதன் மூலம் இலாபம் அடைய நினைப்பவர்கள்.

அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மத வெறி அரசியல் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குபவை.
1. சிஏஏ எனும் கருப்பு சட்டம்
2. முத்தலாக் தடை மசோதா
3. பாபர் மசூதி
4. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம்
5. ஹிஜாப்
6. ஹலால் உணவு
7. பள்ளிவாசலின் பாங்கு
8. மத மோதலை ஏற்படுத்தும் ஊர்வலங்கள்
9. ஜெய் சீராம் சொல்ல சொல்லி தாக்குதல்
10. பசுவின் பெயரால் நடந்த வன்முறைகள்
என்று இவர் சார்ந்தவர்கள் பட்டியல் போட முடியாத அளவிற்கு வன்முறைகளிலும், கலவரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.ஏஸ் போன்ற தீவிரவாத செயலில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்ய சொல்லாமல் தமிழகத்தில் செயல்படும் முஸ்லிம் அமைப்பை குறி வைத்து முக்கிய பொறுப்பில் உள்ள ஆளுநர் பேசுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த போது இவரின் நிர்வாகத்தின் மீது மக்கள் அளவு கடந்த வெறுப்பை வெளிபடுத்தி வந்தனர். நாகாலாந்து ஆளுநர் பொறுப்பு நீக்கப்பட்ட நேரத்தில் நாகாலாந்து மக்கள் அதை கொண்டாட்டமாக கொண்டாடினர்.

இவர் தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்தும் சக்தியாக செயல்படுகிறார். இவர் உடனடியாக தமிழகத்தில் இருந்தும் அகற்றபட வேண்டும் எனவும், ஜனநாயக சக்திகள் ஒருங்கினைந்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு.
ஆர். அப்துல் கரீம்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here