பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவசியம் கேட்கும் சாதிச் சான்றிதழை எளிய முறையில் நமது mobile-ல் இருந்தே விண்ணப்பிக்கும் வழிமுறைகளை பற்றி இக்கட்டுரையில் காப்போம்.
தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் உள்ள குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதை தெரிவித்து வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழே “சாதிச்சான்றிதழ்’. இந்த சான்றிதழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தின் மூலம் இந்த சான்றிதழை பெற முடிந்தது. தற்போது online முறையில் எளிமையாக விண்ணப்பிக்கும் முறை வந்துள்ளது. அந்த வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள் (Documents):
- குழந்தையின் ஆதார் அட்டை,
- தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை,
- குழந்தையின் பிறப்பு சான்றிதழ்,
- குடும்ப அட்டை,
- மாற்றுச் சான்றிதழ்,
- பெற்றோரின் சாதி சான்றிதழ்,
- புகைப்படம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சென்று, சிட்டிசன் லாகின் ஆப்ஷன் மூலம் உள்நுழைய வேண்டும்.
- புதிய பயனர் என்பதை தேர்வு செய்து அதில், கேட்கும் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இப்பொழுது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP எண் வரும். அவற்றைக் கொண்டு நீங்கள் இணையதளத்திற்குள் லாகின் செய்யவேண்டும்.
- இப்பொழுது Department Wise à Revenue Department Option-ஐ கிளிக் பெய்து Community Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்பொழுது PROCEED என்ற தேர்வை click செய்ய வேண்டும்.
- இதன்பிறகு, Register CAN என்ற option-னை click செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
- நீங்கள் பதிவு செய்த எண்ணிற்கு CAN Registration Number Message-ஆக வரும். அதை CAN Register கட்டத்தில் பதிவிட வேண்டும்.
- இப்பொழுது மீண்டும் ஒரு OTP எண் வரும் அதை, உள்ளிட்டு Proceed ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் நீங்கள் பதிவேற்றம் செய்த விவரங்கள் வரும், அவற்றை சரிபார்த்து SUBMIT செய்ய வேண்டும்.
- மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தை Scan செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
- இப்பொழுது, ஒரு Self Declaration Form வரும் அதனை பிரிண்ட் செய்து ஒப்பிட்டு மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
- சாதி சான்றிதழ் பெறுவதற்கு அரசு நிர்ணயித்துள்ள ரூ.60 கட்டணத்தை online-ல் செலுத்த வேண்டும்.
- உங்களது ஆவணங்கள் (Documents) அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின்னர் உங்களது தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும்.
- அதனையடுத்து இதே இணையதளத்தில் உங்களது பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.