TNTJ ஆவடி மர்கஸில் மாவட்ட தர்பியா நடைபெற்றது

இறைவனின் மகத்தான கிருபையால் (20.07.2025) காலை 7 மணியளவில் ஆவடி TNTJ மர்கஸில் வைத்து மாவட்ட தர்பியா நடைபெற்றது.
ஆரம்பமாக, முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல்திட்டத்தின் கிளைகளின் நிலை என்ன? என்பதை குறித்து மாவட்ட தலைவர் அஜாஸ் அஹமது துவக்க உரையும் அதனை தொடர்ந்து மாநில பொருளாளர் சகோ. காஞ்சி இப்ராஹிம் அவர்கள் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் ஏன்? எதற்கு? என்றும், விளிம்பில் இருந்தோர் என்ற தலைப்பில் மாநில தலைவர் சகோ. அப்துல் கரீம் MISc அவர்கள் அழைப்புபணியில் ஈடுபடுவோர் கவனம் எதில் இருக்க வேண்டும் என்ற தலைப்பின்கீழ் பயிற்சி அளித்தார்.
நன்றியுரை மா.து.செ. சகோ அப்துல்லாஹ் நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்