










அழகிய முன்மாதிரி இப்ராஹீம்(அலை) அறிமுக பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் வேதாளைக்கிளை
சார்பில் 7.7.24 அன்று வேதாளை பேருந்து நிறுத்தம் அருகில் அழகியமுன்மாதிரி இப்ராஹீம்(அலை) 10 மாத செயல்திட்டத்தின் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் கரீம்ஹக்சாஹிப்,மாவட்ட துணைத்தலைவர் யாசர்அரபாத்
மாவட்ட துணைச்செயலாளர்கள் மீரான்,உஸ்மான்,பாருக் மற்றும் கிளைச்செயலாளர் சீனி,கிளைத்துணைத்தலைவர் ஜாஹிர்,கிளைப்பொருளாளர் ஜவ்வாது,கிளைத்துணைச்செயலாளர் லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் சபீர்அலி அவர்கள் “இளைய சமுதாயத்திற்கு ஓர் எச்சரிக்கை” என்ற தலைப்பிலும் மாநிலத்தலைவர் அப்துல்கரீம் அவர்கள் “அழகிய முன் மாதிரி இப்ராஹீம்(அலை)” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களை மாவட்ட செயலாளர் தினாஜ்கான் அவர்கள் வாசித்தார்கள்.
இறுதியாக கிளைத்தலைவர் அமீனுல்லாஹ் மிஸ்பாஹி நன்றியுரை நிகழ்த்தினார்.
தீர்மானங்கள்