துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் போது கவனிக்க வேண்டியவை

துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் போது கவனிக்க வேண்டியவை

1. பலவீனமான ஹதீஸ்களா என்பதை கவனித்து வெளியிடவேண்டும்
2 அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் திருக்குர்ஆனின் கூற்றுக்கு மாற்றி உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.
3.பிற இயக்கங்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு போடக்கூடாது. வெளியிடக்கூடாது.
5. தலைமையின் நிலைபாடுகள் கவனத்தில் வெளியிட வேண்டும்
6.உணர்வு ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி விளம்பரம் வெளியிடும் போது புதிய சந்தா தொகை எவ்வளவு என்பதையும் தொடர்பு தொலைபேசி எண்களையும் சரியாகவெளியிடவேண்டும்.
7.டிஎன்டிஜே சேவை நிறுவனங்களை விளம்பரம் செய்யும்போதும் சரியான முகவரியையும் தொலைபேசி எண்களையும் குறிப்பிட வேண்டும். கேள்வி பதில் தொலைபேசி எண்களை குறிப்பிடும் போது சரியான தொலைபேசி எண்கள், அதன் நேரங்களை தெளிவுபடுத்த வேண்டும்.
9. பிற இயக்கங்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டக்கூடாது
10 காவல்துறையில் வழக்குப் பதியும் வகையில் வாசகங்கள் இருக்கக்கூடாது
11.வார்த்தைகள் கவனமாக கையாள வேண்டும்.
12. பிற தெய்வங்களை ஏசும் வகையில் இருக்கக்கூடாது.
13 பிற மதத்தவர்களை சண்டைக்கு இழுக்கும் வண்ணம் அல்லது கோபத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கக்கூடாது.
14. சமயோசிதமான வாசகங்களை பயன்படுத்த வேண்டும்.
15. ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், ஹஜ் உம்ரா விளம்பரங்கள் போடக்கூடாது
16. அனுமதிக்கப்பட்ட விளம்பரங்கள் அளவு மொத்த அளவில் 20 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
18. தலைமை பார்வையிடாமல் துண்டுபிரசுரங்களோ சுவரொட்டிகளோ வெளியிடக்கூடாது

சவால் விடுதல் விவாத அறைகூவல்

1. 10 லட்சம், ஒரு கோடி என்று பரிசுகள் அறிவிக்கக்கூடாது.
2.தேவையில்லாமல் விவாதத்திற்கு அழைக்கக்கூடாது முஸ்லிம்களிடம்

விவாதம்

1. வலிந்து விவாதத்திற்கு அழைக்கக்கூடாது. விவாதித்த தலைப்புக்கு விவாதித்தவர்களிடம் விவாதிக்க அழைக்கக்கூடாது.

முஸ்லிம் அல்லாதவர்களிடம் விவாதம்

1. விவாதத்திற்கு அணுகுபவர்களை எழுத்துப்பூர்வமாக எழுதித் தர வலியுறுத்த வேண்டும்.
2. நமது சார்பில் முதலில் விவாதிக்க வருமாறு அழைப்பு கூடிதம் கொடுக்கக்கூடாது
3. போனில் பேசினால் கண்டிப்பாக அதை ஆவணமாக்கும் வகையில் பதிவு செய்ய வேண்டும்.
5 தலைமைக்கு தெரியாமல் தலைமையின் அனுமதி பெறாமல் ஒப்பந்தங்கள் செய்யக்கூடாது
6.கிளையோ மாவட்டமோ நேரடியாக ஒப்பந்தம் போடக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here